Friday 3rd of May 2024 04:20:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரிஷாத் விவகாரத்தில் எவரையும் காப்பாற்ற முயற்சிக்கவே கூடாது - பிரதமரிடம் வீரசேகர வேண்டுகோள்!

ரிஷாத் விவகாரத்தில் எவரையும் காப்பாற்ற முயற்சிக்கவே கூடாது - பிரதமரிடம் வீரசேகர வேண்டுகோள்!


"நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் காப்பாற்ற அரசில் எவரும் தலையிடக் கூடாது. சிறுமியின் மரணம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தும் செயற்பாடுகளை கண்காணிக்க பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறு சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தான் கோரிக்கைவிடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டில் புதிய சட்ட திருத்தங்களை முன்னெடுப்பது குறித்தும், சிறுவர் பாதுகாப்புக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளோம். அதற்கமைய 14 வயதுக்குக் குறைந்த சிறுவர்களைப் பணிக்கு அமர்த்துவது குறித்து ஆராயவும், அவ்வாறு சிறுவர்களை வலுக்கட்டாயமாகவோ அல்லது வேறு காரணங்களைக் காட்டி பணிக்கு அமர்த்தும் நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் எனக்கு வலியுறுத்தியுள்ளார்.

இப்போதே அதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். இது பொலிஸாரை இணைத்து அவர்கள் மூலமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டமாகும். அதேபோல், சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுத்து 18 வயதுக்குக் குறைந்த எவரும் பணிக்கு அமர்த்தப்படக் கூடாது என்ற சட்ட திருத்தங்களை முன்னெடுக்க ஆராயுமாறும் பிரதமர், நீதி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக செயற்படும் நபர். வீட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது நல்லதல்ல. இதனையே சகலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பில் உயரிய குடும்பங்களில் உள்ளவர்களை அவர்களின் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள மலையகத்தில் உள்ள சிறு வயது பிள்ளைகளைப் பணிக்கு அமர்த்தும் மாபியா ஒன்றும் செயற்பட்டு வருவதாகவே நாம் கருதுகின்றோம்.

இதனை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இதில் யார், எவர் என்ற பாகுபாடு இல்லாது அரசு நடவடிக்கை எடுக்கும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE